முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருமாத உண்ணாவிரதத்திற்கு அனுமதி தரவேண்டும் ஹசாரே நிபந்தனை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 18 - ஒருமாத உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்தால்தான் தான் சிறையில் இருந்து வெளியேவர சம்மதிப்பேன் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே நிபந்தனை விதித்துள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகியோரையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஹசாரேவின் முக்கிய கோரிக்கையாகும். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு லோக்பால் வரைவு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்று கோரி அன்னா ஹசாரே டெல்லியில் கடந்த 16 ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டம், இந்த உண்ணாவிரதத்தில் 5 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கக் கூடாது, இரவு 9 மணிக்குமேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது ஆகியன உள்ளிட்ட 22 நிபந்தனைகளை டெல்லி போலீசார் விதித்திருந்தனர். ஆனால் இந்த 22 நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட 6 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து இவர் உண்ணாவிரதம் இருக்க இருந்த ஜெ.பி. பூங்கா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை மீறி தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே கூறியிருந்தார். இதையடுத்து அவரை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்படி அவர் நேற்று முன்தினம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து ஹசாரேவை நேற்று முன்தினமே டெல்லி போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் தான் சிறையை விட்டு வெளியே வர முடியாது என்று ஹசாரே மறுத்துவிட்டார். சிறையிலேயே உண்ணாவிரதத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அவருடன் டெல்லி போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதம் இருக்கலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கலாம் என்று சில நிபந்தனைகளை அவர்கள் தளர்த்தினர். ஆனால் தான் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்தால்தான் சிறையை விட்டு வெளியே வரப்போவதாக அன்னா ஹசாரே திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் டெல்லியில் தொடர்ந்து பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்