முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே விவகாரம்: பிரதமர் பேச்சால் மக்களவையில் அமளி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 18 - நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஹசாரே விவகாரம் கிளப்பப்பட்டது. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கமளித்தார். காலை 11 மணிக்கு மக்களவையில் பேசிய மன்மோகன்சிங், ஹசாரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் கைது செய்யப்பட்டார்.  அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவற்றுக்கு அனுமதி அளிப்பது சூழ்நிலையை பொறுத்தது என்றார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெட்கம், வெட்கம் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து பேசிய பிரதமர், தனது லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஹசாரே விரும்புகிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழி தவறானது.
சட்டங்களை உருவாக்குவது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை செய்ய ஹசாரே போன்றவர்கள் அனுமதிக்க வேண்டும் என்றார். பிரதமர் பேசி முடித்ததும் அத்வானி எழுந்து எமர்ஜென்சி போன்ற சூழ்நிலையை அரசு உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஆதரவாக பா.ஜ.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பன்சால், அத்வானி அவையை நன்றாக நடத்துகிறார். மேலும் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்றார்.
இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டதால் மக்களவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. ஹசாரே கைது குறித்து மாநிலங்களவையிலும் பிரதமர் விளக்கமளித்தார். அங்கும் பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்