முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா நில மோசடி வழக்கில் கர்நாடக தலைமை செயலருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஆக.- 18 - நில மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அம்மாநில கவர்னர் அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து எடியூரப்பா ரிட் மனு தாக்கல் செய்துள்ளது தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளருக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது நில மோசடி, சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் எடியூரப்பா மீது கூறப்படும் நில மோசடி புகார்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யலாம் என்று கர்நாடக ஆளுனர் எச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி அளித்துள்ளார். இந்த அனுமதியை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது ஐகோர்ட்டு நீதிபதிகள் அஜீத் புஞ்சால், பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக கர்நாடக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வருகிற 25 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 25 ம் தேதி தனது ரிட் மனு மீதான விசாரணையில் மாநில அரசையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 25 ம் தேதி இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அவர் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ததை அடுத்து தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்  உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு நேற்று வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்