முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட இத்தனை கட்டுப்பாடுகள் இல்லை-அருண்ஜேட்லி பேச்சு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 18 - அன்னா ஹசாரே கைது நடவடிக்கை குறித்து  பிரதமர்  தாக்கல் செய்த அறிக்கை மீது  பேசிய பா.ஜ.க.  தலைவர் அருண் ஜேட்லி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை என்றார். ஊழலுக்கு எதிராக வலுவான  லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம்  பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அதனால் அவரை  போலீசார்  கைது  செய்து  கோர்ட்டில் ஆஜர்படுத்தி  பின்னர் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் விடுதலை  செய்யப்பட்டதாகவும்  மத்திய அரசு அறிவித்தது.  அன்னா ஹசாரே கைது விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்   அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கூறியிருந்தது.  அதன்படி பாராளுமன்றத்தின் இரு  சபைகளிலும்  பிரதமர் மன்மோகன் சிங் நேற்று  அன்னா ஹசாரே கைது  குறித்த அறிக்கையை  தாக்கல்  செய்தார்.
ராஜ்ய சபையில் இந்த அறிக்கை மீது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி(பா.ஜ.க.) பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட இத்தனை கட்டுப்பாடுகள் இல்லை என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலுக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமருக்கு ஆலோசனை கூற நிறைய வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.  ஆனால்  யாருக்குமே பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்பது  தெரியவில்லை.  அரசியல் பிரச்சினைக்கு  அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டுமே தவிர போலீசாரை  வைத்து தீர்வு காணக்கூடாது என்றும் ஜேட்லி கூறினார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அன்னா ஹசாரேவுக்கு விதிக்கப்பட்டது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனவா என்பதை எல்லோரும் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காந்திஜிக்குகூட அப்போது இதுபோன்ற  கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் விதிக்கவில்லை என்றும்  அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அன்னா ஹசாரேவுக்கு 22 நிபந்தனைகளை  டெல்லி போலீசார் விதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் 5,000 பேருக்குமேல்  யாரும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்குமா? என்றும் ஜேட்லி கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மன்மோகன் சிங் இப்போது டெல்லி போலீசாரின் பின்பக்கமாக ஒளிந்து கொண்டு செயல்படுகிறார் என்றும் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago