முக்கிய செய்திகள்

இலங்கையில் துறைமுகம் அமைக்கிறது சீனா

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஆக.19 - ரூ. 2,270 கோடி செலவில் இலங்கையில் பெரிய அளவிலான துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் சீனாவுக்கு 4 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே சென்று வந்தார். அப்போது இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா சமீபத்தில் செய்துள்ள மிகப் பெரிய முதலீடாகும் இது. 

பெரிய அளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படும் வகையில் இந்த துறைமுகம் அமைக்கப்படும். துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின் சீனா மெர்ச்சண்ட் ஹோல்டிங்ஸ் இன்டர்நேசனல் நிறுவனமும், 30 சதவீத பங்குகள் இலங்கையின் அய்ட்கென் ஸ்பென்ஸ் ஹோல்டிங் நிறுவனமும், 15 சதவீத பங்குகள் இலங்கை துறைமுக ஆணையத்திடமும் இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்படும். துறைமுகத்தின் முதல் கட்டபணிகள் 2015 ல் முடிக்கப்படும். 

ஏற்கனவே சீனா ரூ. 6,810 கோடி முதலீட்டில் ராஜபக்சேவின் தொகுதியான அம்பனத்தோட்டத்தில் மிகப் பெரிய அளவிலான துறைமுகத்தை கட்டி வருகிறது. சீனாவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களான சீனா ஹார்பர் சினோ ஹைட்ரோ ஆகியவை இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய வசதியாக தனது வெளியுறவு கொள்கைகளை இலங்கை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: