முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் முன்னாள் எம்.பி. உட்பட 12 பேர் கொலை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஆக. 19 - பாகிஸ்தானில் முக்கிய நகரமான கராச்சியில் குற்றச் செயல்கள் அதிகரி த்து வருகின்றன. நேற்று முன் தினம் கராச்சி நகரில் பல இடங்களில் பொதுமக்கள் மீது சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதில் முன்னாள் எம்.பி. ஒருவர் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வஜாகரீம் தத் (வயது 63), தனது நண்பர்களுடன் அங்குள்ள ஓட்டல் ஒன்றில், சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். 

அப்போது, துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கும்பல் அவரை சுட்டது. 

உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த வஜாகரீம் தத் சம்பவ இடத்தி லேயே பலியானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: