முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர்மசூதி இடிப்பு அத்வானி-பால்தாக்கரேவுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 5 - பாபர் மசூதி விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் எல்.கே. அத்வானி, பால்தாக்கரே ஆகியோர் உள்பட பல தலைவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திட்டமிட்ட சதித்திட்டம் என்றும் இந்த சதித்திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மற்றும் பல தலைவர்கள்தான் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

 இந்த சம்பரம் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத், சி.பி.ஐ. கோர்ட்டு, அத்வானி மற்றும் தலைவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டும் சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்தும் சி.பி.ஐ. சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது நீதிபதிகள் வி.எஸ்.சர்புர்கார், டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.கே. அத்வானி, முரளிமனோகர், பால்தாக்கரே உள்பட சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நோட்டீசுக்கு வரும் 4 வார காலத்திற்குள் பதில் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்