முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஒதுக்கீடு விவகாரம்: பார்லியில் அமளி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.19 - பாராளுமன்றம் நேற்று பகல் 11 மணிக்கு கூடியதும் வழக்கம் போல் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரியானா மாநிலத்தில் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை பா.ஜ.க. எம்.பி. ராஜ்நாத்சிங் எழுப்பினார். அவருக்கு அனுமதி அளிக்க சபாநாயகர் மீராகுமார், இந்த பிரச்சினை குறித்து நேரமில்லா நேரத்தில் விவாதிக்கலாம் என்றார். இதை ஏற்க மறுத்த பா.ஜ.க எம்.பிக்கள் நில ஒதுக்கீடு முறைகேடாக நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர். 

இதற்கு ஆளும் கட்சி வரிசையில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க. எம்.பிக்களும் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்காக நிலம் வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்து நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பாராளுமன்ற மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து சபையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்