முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கஜானாவுக்கு பாதுகாவலர்களால்தான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: அண்ணா ஹசாரே

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 21 - அரசு கஜானாவுக்கு திருடர்களால் அச்சுறுத்தல் ஏற்படவில்லை. அதை பாதுகாக்கும் பாதுகாவலர்களால்தான் பெரும் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என்று அண்ணா ஹசாரே கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்க பலமான சட்டம் கொண்டுவரக்கோரி டெல்லியில் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ராம் லீலா மைதானத்தில் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேவுடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். அவர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, அரசு கஜானாவுக்கு திருடர்களால் எந்தவித அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்படவில்லை. அதன் பாதுகாவலர்களால்தான் பெரும் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என்றார். அரசு கஜாவில் இருக்கும் பணம் மக்களுடையது. அதை பாதுகாக்கவே நாம் போராடுகிறோம் என்றும் ஹசாரே ஆவேசமாக கூறினார். எனது எடையில் மூன்றரை கிலோ குறைந்துவிட்டது. சிறிது பலவீனத்தை உணர்கிறேன். ஆனால் அதுபற்றி கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை. பலமான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை என்றும் ஹசாரே உறுதியாக கூறினார்.  லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக எங்களுடன் அரசு தரப்பில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று ஹசாரேயின் நெருங்கிய சகாக்களான அரவிந்த் கெஜ்ரிவால்  மணீஷ் சிசோதயா பேசும்போது கூறினர். எங்கே,யாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
பலமான லோக்பால் மசோதாவை வரும் 30-ம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்