முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு தலைவலியை அதிகரிக்க பா.ஜ. ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

உஜ்ஜையன்,ஆக.- 21 - ஊழல் பிரச்சினையல் மத்திய அரசுக்கு வற்புறுத்தலையும் தலைவலியையும் அதிகரிக்கச் செய்யும் வகையில் பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நேற்று உஜ்ஜையன் நகரில் சந்தித்து பேசினர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க உஜ்ஜையன் நகரில் இந்துமத இயக்கங்களில் ஒன்றான ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் 5 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தி வருவதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடக்கும் உஜ்ஜையனுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர். அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பா.ஜ. தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அந்த சந்திப்பின்போது மத்திய அரசுக்கு எதிராக ஆர்.எஸ். எஸ். எடுக்கும் முடிவுக்கு தகுந்தவாறு பாரதிய ஜனதா தலைவர்கள் பாராளுமன்றத்தில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷமா சுவராஜ் ஆகியோரும் உஜ்ஜையன் சென்றுள்ளனர். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம், வகுப்பு கலவரம் குறித்தும் இவர்கள் விவாதித்தாக தெரிகிறது. மேலும் இந்துமத இயக்கங்கள் ஒன்றுபட்டு செயல்பட இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்