முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது இந்திய கம்யூனிஸ்டு ராஜா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், ஆகஸ்ட்.- 21 - இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று பூதப்பாண்டியில் ஜீவா பிறந்த நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கட்சியின் தேசிய செயலாளர் ராஜா நேற்று நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:- நாடு விடுதலை பெற்ற பின்பு இப்போது ஊழல் மலிந்து விட்டது. 2ஜி ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என பல்வேறு மட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வலுவான  சட்டம் தேவை. இதற்காக போராடும் அன்னா ஹசாரேவை இந்திய கம்யூனிஸ்டு ஆதரிக்கிறது. லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய கம்யூனிஸ்டு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறது. மேலும் இந்திய தேர்தல் முறையிலும் சீர்த்திருத்தம் தேவைப்படுகிறது. தேர்தலில் பணம் முறைகேடாக பயன்படுவதை தடுக்கவும், குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும் சீர்த்திருத்தம் தேவைப்படுகிறது. ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு 9 கட்சிகள் இணைந்து வருகிற 23ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இலங்கையில் நடந்த போது உலக நாடுகளின் கண்ணை மறைத்து இலங்கை போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். அதை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது. வருகிற புதன்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் நடக்க இருக்கிறது. இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி அட்டூழியம் புரிகிறது. எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதிய தலைமை செயலகத்தை அரசு ஆஸ்பத்திரியாக்க அரசு முடிவு செய்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சந்திரபாபு உடன் இருந்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago