முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 23-ம் தேதி மார்க்சிய கம்யூ. ஆர்ப்பாட்டம்-ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 21 - அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வரும் 23-ம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என்று மார்க்சிய கம்யூனிஸ்டுகட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று மதுரையில் பேட்டி அளித்தார்.   மத்திய அரசு ஊழலுக்கு எதிராக தயாரித்த லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை. இந்த மசோதாவை திருத்தி அமைத்து தாக்கல் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. காந்தியவாதி அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அன்னாஹசாரேக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது பற்றி மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனை ஆக்க முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இதற்கு தமிழக அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி பாராட்டு தெரிவித்து கொள்கிறது. உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டின்போது மாவட்ட செயலாளர் விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன், ஜோதிராம் ஆகியோர் உடன்இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago