முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் பண்டிகை காலத்திலும் பாக்,ஆப்கானில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

பெஷாவர், ஆக.- 21 - ரம்ஜான் பண்டிகை காலத்திலும் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியதில் 50 பேர் பலியானார்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது முஸ்லீம் மக்கள் ரம்ஜான் விரதம் இருந்து வருகிறார்கள். அதனால் மசூதிகளுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகையே என்று கூட தீவிரவாதிகள் நினைக்காமல் மிருகத்தனமாக தற்கொலை படை தாக்குதலை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மலைசாதியினர் அதிகமாக வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்த தாக்குதல் பெரிய அளவில் நடந்துள்ளது. ஹைபர் ஏஜன்சியில் உள்ள ஒரு மசூதியில் சுமார் 500 பேர் தொழுகை நடத்தி முடிக்கும் தருவாயில் மசூதியின் ஜன்னல் வழியாக 15 முதல் 16 வயது வரை உள்ள ஒரு சிறுவன் மசூதியின் மையப்பகுதிக்கு சென்று தன் எடுப்பில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்க செய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரம்ஜான் பண்டிகை காலத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்கு அதிகமான மக்கள் வருவார்கள். இதையெல்லாம் கணித்த தீவிரவாதிகள் அந்த சிறுவன் மூலமாக குண்டை வெடிக்க செய்துள்ளனர். இதில் 40 பேர் உடல் சிதறி பலியானார்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் கை,கால்கள்,அவர்கள் அணிந்திருந்த தொப்பிகள், விரிப்பான்கள் ஆகியவைகள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடந்தன. மின்விசிறிகளும் வெடித்து சிதறிக்கிடந்தன. மசூதிக்குள் அந்த சிறுவன் நுழைந்ததும் என்னை யார் இந்த மசூதியில் இருந்து வெளிற்றுவார் என்று சத்தம் போட்டதாகவும் சத்தம் போட்ட ஒரு நிமிடத்தில் தன் உடம்பில் கட்டி வைத்திருந்த குண்டை வெடிக்க செய்ததாகவும் நேரில் பார்த்த மஸ்தான் அப்ரிதி என்பவர் தெரிவித்தார். குண்டுவெடித்த சிறுவன் பல நாட்களுக்கு முன்பு அந்த பகுதிக்குள் திரிந்ததாகவும் அவன் மேல் சந்தேகப்பட்டவர்கள் துரத்தி விரட்டியதாகவும் மசூதி அதிகாரி சையத் அகமத் ஜன் தெரிவித்தார். அந்த சிறுவன் 8 முதல் 10 கிலோ வரை குண்டுகளை உடம்பில் கட்டிக்கொண்டு அங்குமிங்கம் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதேமாதிரி ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க கூட்டு படையினர்களுக்குமிடையே நடந்த சண்டையில் 10 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரிட்டீஷ் தூதரக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகத்தை தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் திடீரென்று தாக்கினர். இதனால் அமெரிக்க கூட்டுப்படையினர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பலமணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்