முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.சிக்கு ஒதுக்கிய இடங்களை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கக் கூடாது-சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.- 21 - மத்திய பல்கலைக் கழகங்களில் இதர, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மெரிட் பட்டியல் இடங்களை பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ரவிச்சந்திரன், பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 45 ல் இருந்து 50 க்குள் இருக்க வேண்டும். நுழைவு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்ணாக 40 சதவீதம் என பொது பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அது 36 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது. இந்த ஆண்டு கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களில் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான காலவரம்பை இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்