முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபாசுவாமி கோயில் விவகாரம் அச்சுதானந்தன் குற்றச்சாட்டுக்கு மன்னர் வாரிசான மார்த்தாண்ட வர்மா பதில்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஆக.- 22 - பத்மநாபாசுவாமி கோயில் பொற்குவியல் தொடர்பாக கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றச்சாட்டுக்கு திருவாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும் கோயில் நிர்வாகியுமான மார்த்தாண்ட வர்மா மழுப்பலான பதில் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தின் மத்திய பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்மநாபா சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து பார்க்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ரகசிய அறைகளில் பி அறையை தவிர இதர அறைகள் திறக்கப்பட்டன. அவைகளில் சுமார் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் நகைகள், தங்க கட்டிகள், வைர நகைகள், வைடூரியம், மரகதம்,முத்துக்கள் ஆகியவைகள் இருப்பது தெரியவந்தது. அவைகள் எடுக்கப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள  பி அறையை திறக்கக்கூடாது என்று கோயில் அறக்கட்டளை தலைவர் மார்த்தாண்ட வர்மா சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அறையை திறந்தால் நாட்டுக்கு கேடு ஏற்படும் என்றும் அறையை திறப்பவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் வழக்கு தொடர்பாக மனுவில் மார்த்தாண்ட வர்மா கூறியுள்ளார்.
இந்தநிலையில் கோயில் அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை மார்த்தாண்ட வர்மா தினமும் டிபன் பாக்ஸில் திருடிச்செல்வதாக கேரள மாநில முன்னாள் முதல்வரும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வர்மா தினமும் பத்மாநாபா கோயிலுக்கு வரும்போது ஒரு டிபன் பாக்ஸில் பாயாசம் கொண்டு வருவது போல் வருகிறது. சாமியை கும்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸில் தங்க நகைகள், வைரங்கள், முத்துக்கள், வைடூரியங்களை திருடி அதற்குள் மறைத்துவைத்து எடுத்துச்செல்கிறார். மன்னர் ஆட்சி முறை ஏற்கனவே ஒழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. பி. அறையை திறப்பவர்கள் இறந்துவிடுவார்கள் என்று வர்மா கூறுவதல்லாம் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அச்சுதானந்தன் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
அச்சுதானந்தனின் இந்த குற்றச்சாட்டுக்கு வர்மா மழுப்பலான பதில் அளித்துள்ளார். அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதனால் தற்போது அச்சுதானந்தனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. நகை மதிப்பீடு முடிந்த பின்னர் அச்சுதானந்தன் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பேன் என்றும் வர்மா கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்