முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் பயணமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஆக. - 22 - இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மேற்கு வங்காள மாநிலம் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து  விமானம் மூலம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புறப்பட்டுச் சென்றார். கொல்கத்தா நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ஏற்றதற்கு பிறகு  மன்மோகன் சிங் கொல்கத்தாவுக்கு வந்தது  இதுவே முதல் முறையாகும்.  கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை  மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். கொல்கத்தாவிற்கு பிரதமருடன் மத்திய  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,  பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி  ஆகியோரும் வந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள சாஹா அணு இயற்பியல் நிலையத்தின் வைர விழா கொண்டாட்டங்களில்  மன்மோகன் சிங்கும் மேற்கு வங்க கவர்னர் எம்.கே. நாராயணன்,  முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர். கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த மன்மோகன் சிங்கை மம்தா பானர்ஜியும் அவரது அமைச்சரவை சகாக்களும் சந்தித்து பேசினர். இன்று  ஜோகாவில் நடைபெறும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.)  கொல்கத்தா நிலையத்தின்  பொன் விழா கொண்டாட்டங்களையும் பிரதமர் துவக்கி வைக்கிறார்.
ஜோகாவில் இருந்து  கரக்பூருக்கு  செல்லும் பிரதமர் அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட்  ஆப் டெக்னாலஜி ( ஐ.ஐ.டி.) யின் வைர விழா மற்றும் 57-வது பட்டமளிப்பு விழாக்களிலும்  பங்கேற்பார்.
இந்த நிகழ்ச்சிகளில் மேற்கு வங்க கவர்னர் மற்றும் முதல்வர் இருவரும் கலந்த கொள்வார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்