முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் இணைந்தது நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 22 - தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரபூர்வமாக இணைந்தது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முன்னிலையில் தனது கட்சியை சிரஞ்சீவி காங்கிரசில் இணைத்தார். இனி என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டனாக இருப்பேன். கட்சியின் எதிர்காலமும், நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமும் ராகுல் காந்திதான் என்று சிரஞ்சீவி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆந்திரத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரம் பகுதிகளில் செல்வாக்கு உள்ள சிரஞ்சீவி, திருப்பதியில் கடந்த 2008 ல் பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்