முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி. ஆக.- 22 - திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்​ஜெட்டில் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், கால்நடைத்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு பிரிவிற்கும், அதாவது வெளி நோயாளிகள் பிரிவு, மருந்து கொடுக்கும் இடம், இருதய சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு, ஊசி போடும் இடம், சி.டி.ஸ்கேன், அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு, சிசு வார்டு, முடnullநீக்கியல் பிரிவு ஆகிய இடங்களில் மருத்துவ வசதிகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள் தகுந்த சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் தற்போது ரூ.100 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி சூப்பர் ஸ்பெஷாலிட்டி இருதய நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, வயிறு  மற்றும் குடல் நோய் சிகிச்சை பிரிவு, குடல் நோய் அறுவை சிகிச்சை பிரிவு, மூளை நரம்பியல் நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரக நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரக நோய் அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்புகள் மாற்று சிறப்பு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவு என மொத்தம் 10 சிறப்பு பிரிவுகளுடன் 6000 சதுர அடியில் 6 அடுக்குமாடி தளம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் பொதுப்பணித்துறை பொறியாளருடன் அமைச்சர் வி.எஸ்.விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கி.ஆர்.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியை பார்வையிட்டு அங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் நவீன முறையில் மூளையின் நடுப்பகுதியில் உள்ள கட்டியை எண்டோஸ் கோப் மூலம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்படும் விதத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.25 கோடியில் நவீன பிரசவ வார்டு, மற்றும் ரூ.1.65 கோடியில் பேறுகால நிலையம், அறுவை அரங்கம், 30 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் இரண்டு டயாலிசிஸ் யூனிட்டுகள், அதிநவீன பரிசோதனை மையம், வெண்டிலேட்டர், குளிர்சாதன வசதியுடன் கூடிய 5 சிறப்பு அறைகள் அமைக்கப்பட உள்ள இடத்தையும், ரூ.19.44 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பிணவரை அமைய உள்ள இடத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் நேரில் பார்வையிட்டு அதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆர்.மனோகரன், டி.பி.nullனாட்சி, ஆர்.சந்திரசேகர், டி.இந்திராகாந்தி, மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, துணை இயக்குனர் டாக்டர் என்.முத்துராஜ், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அ.கார்த்திகேயன், துணை முதல்வர் டாக்டர் அலீம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகர், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.சிவக்குமார், உதவி இருக்கை அலுவலர் டாக்டர் எஸ்.கயல்விழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் த.மோகனசுந்தரம், துணை இயக்குனர் டாக்டர் வை. வீரபாண்டியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) சம்பத், செயற்பொறியாளர் அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பரஞ்சோதி, செ.ரெத்தினவேல், எஸ்.எம்.பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்