முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள்நல திட்டங்களை வாரி வழங்கி வருகிறார் ஜெயலலிதா: ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி, ஆக. - 21. - தமிழக மக்கள் நலமுடன் வாழ ஏராளமான மக்கள் நல திட்டங்களை வாரி வழங்குவதில் நமது முதல்வர் முதலிடத்தில் உள்ளார் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்ரீவில்லியில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஸ்ரீவில்லி வட்டாரத்தில் வருவாய்துறை சார்பில் அரசு நல உதவி திட்டம் வழங்கும் விழா ராமராஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு ஸ்ரீவில்லி வட்ட அளவில் 393 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் உலகமே வியக்கும் வகையில் நல் ஆட்சி வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று 3 மாதங்கள் இது 2விழா ஆகும்.  இன்று அனைவரும் வியக்கும் வகையில் நமது மாவட்டத்தில் 7 இடங்களில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.  அரசின் வேகமான நல்ல செயல்பாடுகளுக்கு நமது கலெக்டர் உறுதுணையாக உள்ளார். விடுமுறை நாள்களிலும் கூட நமது அரசு மக்களை தேடி சென்று பல உதவிகளை செய்து வருகிறது. இங்கு உள்ள பயனாளிகள் உண்மையிலேயே ஏழை மக்களுக்கான ஆட்சி முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது.
 அரசின் உதவிகளை பெற மக்கள் நடையாய் நடந்து சென்று இப்போது அரசே மக்களை தேடி சென்று நல உதவிகளை வழங்கி வருகிறது. இதில் இருந்தே மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வாரி வழங்குவதில் முதல்வர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார் என்பது தெரிகிறது நமது முதல்வருக்கு குடும்பம் கிடையாது. நமது தமிழ்நாட்டு மக்கள்தான் குடும்பம் அவர்களது நல் வாழ்விற்காக மட்டுமே நமது முதல்வர் சிந்தித்து திட்டங்களை தீட்டி வருகிறார்.
நல்ல திட்டங்களை தீட்டி அவற்றினை செயல் ஆக்கம் செய்திடும்வகையில் செயலாக்கத்துறை ஒன்று உருவாக்கி ஆக்கபூர்வமான திட்டங்கள் மக்களை சென்று அடையும் வகையில் முதல்வர் வழி வகை செய்துள்ளார் என பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.அ.ராமன் வரவேற்று பேசினார். ஸ்ரீவில்லி எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், சிவகாசி எம்.எல்.ஏ. கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆகியோர் வாழ்த்து வழங்கினர்.
விழாவில் ஸ்ரீவில்லி அதிமுக தொகுதி செயலாளர் சிந்து முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் கவுரிநாகராஜன், தாசில்தார் வீரராகவன், அரசு வழக்கறிஞர் மங்களசாமி, நகர செயலாளர் முனியசாமி, கவுன்சிலர் மகேஸ்வரன், திட்ட ஆணையாளர் சாந்தி, நகராட்சி ஆணையாளர் முத்துகண்ணு உட்பட அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் தனி துணை ஆட்சியர் கொங்கன் நன்றி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்