முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே பயங்கரம் இடத்தகராறில் அ.தி.மு.க. கிளைச்செயலாளர் வெட்டிக்கொலை

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஆக.- 22 - திருமங்கலம் அருகே இடத்தகராறு காரணமாக அ.தி.மு.க. கிளைச் செயலாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க. வைச் சேர்ந்த இருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி யூனியனுக்கு உட்பட்ட டி.அரசப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்தவர் கருப்பையா(41). இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே ஊரிலுள்ள 7 சென்ட் நிலம் தொடர்பாக கருப்பையாவுக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் மின்னினைப்பு பெறுவதற்காக கருப்பையா முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கருப்பையாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எதிர்தரப்பினரான தி.மு.க. வைச் சேர்ந்த மகேஸ்வரன், உத்திரகுமார், ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மாரித்தேவர் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago