முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 21 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக.- 22 - மும்பையில் 21 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள போர் பங்களா என்ற இடத்தில் மொஹித் ஹைட்ஸ் என்ற 21 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 21 வது மாடியில் திடீர் என்று தீப்பிடித்துக்கொண்டது.  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 8 தீ அணைக்கும் என்ஜின்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.  இந்த  தீவிபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இந்த  தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்