முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஊடுருவ முயற்சி முறியடிப்பு: 12 பேர் பலி

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஆக.- 22 - காஷ்மீர் மாநிலம் எல்லை பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 2 ஜவான்கள் காயமடைந்தனர்.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அடுத்த குரேஸ் என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை பார்த்த ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாதிகளும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த நீண்ட நேர துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர். 

இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஜவான் இருவர் காயமடைந்தனர். இந்த ஆண்டிலேயே இது தான் மிகப் பெரிய பயங்கரவாத ஊடுருவல். ராணுவ வீரர்களின் தீவிர கண்காணிப்பால் இந்த ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று ராணுவத் துறை செய்தி தொடர்பாளர் கர்னல் பிரார் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே எல்லை பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நடை பாதைகள் கோடை காலத்தில் திறந்திருக்கும். மக்கள் போக்குவரத்துக்காக இந்த பாதைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இதனை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதன் வழியாக இந்தியாவுககுள் ஊடுருவ முயல்கின்றனர் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்