முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடல் தீவில் நில நடுக்கம் - மக்கள் பீதி

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

சிட்னி, ஆக. - 22 - ஆஸ்திரேலிய அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டி டங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். இது பற்றிய விபரம் வருமாறு -  தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா அருகே வனாது என்ற நாடு உள்ளது. இது 83 தீவுகள் கொண்டது. சுமார் 2 ஆயிரம் கி.மீட்டர் பரப் பளவு உடையது. 

நேற்று அதிகாலை 3.55 மணியளவில் வனாது தலைநகர் போர்ட் விலா நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் சக்தி வாய்ந்த நில நடு க்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியும் அச்சமும் அடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்த னர். சிறிது நேரம் கழித்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர். 

இந்த நிலையில் காலை 5.19 மணிக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்ட து. அதைத் தொடர்ந்து பல தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பயத்தி ல் உறைந்த மக்கள் விடிய விடிய ரோடுகளிலேயே தங்கி இருந்தனர். 

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவிலும், 2 -வதாக உரு வான நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்க புவி யியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் போர்ட் விலாவை மையப்படுத்தி பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட கடலில் மிக உயரமான அலைகள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் என மக்கள் பயந்தனர். ஆனால் பசிபிக் சுனாமி மையம் எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலந டுக்கம் போர்ட் விலாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப் பட்டது. 

இதனால் சில கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளில் விரி சல் ஏற்பட்டது. மொத்தத்தில் சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்ட தாகவும், உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும், அறிவிக்கப்பட்டு உள் ளது. 

பூகம்ப எச்சரிக்கை பகுதியில் வனாது நாடு உள்ளது. இங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் 26 -ம் தேதி இங்கு 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்