முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக ஆர்வலர் ஹசாரே 7வது நாளாக உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 23 - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று தனது 7 வது நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.  ஹசாரேவுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று அறிவித்திருந்த போதிலும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையேயான முட்டுக்கட்டை நீடிக்கிறது. ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் அந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்போரையும் சேர்க்க வேண்டும் என்று பிரபல சமூக சேவகர் 73 வயதான அன்னா ஹசாரே கடந்த 16 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதம் 15 நாட்களுக்கு டெல்லி போலீசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஹசாரேவின் ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதம் நடைபெற்று வரும் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வலுவான லோக்பால் மசோதா குறித்து அன்னா ஹசாரேவுடன் பேச்சு நடத்த தயார் என்று நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து இருந்தார். இதே போல மத்திய அரசு விரும்பினால் தானும் பேச்சு நடத்த தயார் என்று ஹசாரேவும் அறிவித்து இருந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் ஐ.ஐ.டி. நிலையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய  மன்மோகன் சிங் லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்கமிட்டியின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் ஹசாரே குழுவினர் தங்களது கருத்துக்களை அங்கே சென்று தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் தங்கள் குழுவின் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் என்று ஹசாரேவும் பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையேயான முட்டுக்கட்டை நீடிக்கிறது. பேச்சுவார்த்தை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை . 

பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்த போதிலும் தங்களது குழுவினருடன் மத்திய அரசு தரப்பில் இருந்த யாரும் பேச்சு நடத்த வரவில்லை என்று ஹசாரே குழுவினரில் ஒருவரான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்