முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் அபகரிப்பு - நடிகர் விக்னேஷ் மீது புகார்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஆக.25 -​ போலி ஆவணம் தயரித்து தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக நடிகர் விக்னேஷ் மீது உறவு பெண்மணி ஒருவர் புகார் அளித்திருந்தார்.இதுப்பற்றி சென்னை போலிஸ் கமிஷ்னரிடம் நடிகர் விக்னேஷ் நேரில் அஜராகி விளக்கம்  தெரிவித்தார் .இது பற்றி விபரம் வருமாறு; சென்னை ஈக்காட்டுதாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த வீரம்மாள் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:​எனக்கு சின்னதம்பி, ராஜி, தங்கராஜ் என்ற 3 மகன்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்து சிட்கோ தொழிற்பேட்டையில் 3 கிரவுண்ட் நிலம், பாலாஜி நகரில் 2990 சதுர அடியில் 2 வீடுகள், ஜவகர்லால் நேரு மெயின் ரோட்டில் 2675 சதுர அடியில் கடை ஆகிவற்றை வாங்கினார்கள். குடும்பத்தில் மூத்தவர் என்ற முறையில் அனைத்து சொத்துகளும் சின்னதம்பி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த சொத்துகள் பற்றி சின்னதம்பி உயில் எழுதி அதன்படி தம்பிகளுடன் பாகப்பிரிவினையும் செய்து கொண்டார். இந்த நிலையில் சின்ன தம்பி 2001​ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். சின்னதம்பியின் மனைவி கீதாவின் அக்காள் உமாமகேஸ்வரியை நடிகர் விக்னேஷ் திருமணம் செய்துள்ளார். நடிகர் விக்னேஷ் எனது மூத்த மகனின் 2 மகன்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு மருமகள் கீதா, விக்னேசின் மனைவி உமாமகேஸ்வரி, மற்றும் உமாமகேஸ்வரி யின் தாய் சுதா ஆகியோர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீரபாண்டியன் வீட்டில் வைத்து போலியான  ஒரு உயில் ஒன்றை  தயாரித்துள்ளனர். அதை பார்த்துவிட்ட எனது மகன் ராஜியை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்கள். ரவுடிகள் துணையுடன் எனது குடும்ப சொத்தை அபகரித்து கட்டிடம் கட்டி வருகிறார்கள். எனது மகன் இறந்த பிறகு மாம்பலம்​கிண்டி தாலுகா அலுவலத்தில் வாங்கப்பட்ட வாரிசு சான்றிதழில் எனது பெயரும், எனது மருமகள் கீதா மற்றும் பேரன்கள் அரவிந்த், வசந்த், ஆகியோரின் பெயர்களும் இருந்தன. நடிகர் விக்னேஷ் அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் நான் இறந்து விட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அதன் மூலம் வாரிசு சான்றிதழில் எனது பெயரை null நீக்கி போலியாக ஒரு சான்றிதழை தாலுகா அலுவலகத்தில் பெற்றுள்ளனர்.இதுபற்றி கலெக்டரிடம் நான் புகார் செய்தேன். அவர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார். இந்த போலி சான்றிதழ்கள் மூலம் எங்கள் குடும்ப சொத்தை எனது பேரன்கள் வசந்த், அரவிந்த், துணையுடன் விக்னேஷ் அவரது மனைவி உமாமகேஸ்வரி, மாமியார் சுதா ஆகியோர் அபகரித்துள்ளானர். மேலும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். தாங்கள் எனது குடும்ப சொத்தை மீட்டு தருவதுடன் என் உயிருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். இந்த புகாரை அடுத்து நேற்று சென்னை போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு நடிகர் விக்னேஷ் தனது மனைவி உமா மகேஷ்வரியுடன் வந்து கமிஷ்னரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அதில் தான் எந்த நில மோசடியிலும் ஈடுபடவில்லை என்றும் தான் முறைப்படி அந்த நிலத்தை வாங்கி உள்ளதாகவும் அதற்க்கான் ஆவணங்கள் தன்னிடம் உள்ளாதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறிய விக்னேஷ் நிலம் பற்றிய வழக்கு nullநீதிமன்றத்தில் உள்ளதாகவும் தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்