முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 25க்குள் முடிகிறது-பிரணாப்முகர்ஜி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 5 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற 25 ம் தேதிக்குள் முடிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 21 ம் தேதி முடிவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடர் முடிக்கப்படுகிறது.  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி ஆரம்பமானது. முதல் நாளன்று இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரை நிகழ்த்தினார். பின்னர் 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்தனர். 

இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 21 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. அதாவது முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 16 ம் தேதி முடிவதாகவும், 2 வது கட்ட கூட்ட தொடர் ஏப்ரல் 4 ல் தொடங்கி ஏப்ரல் 21 ல் முடிவதாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரள மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதிகள் தேர்தல் கமிஷனால் முறைப்படி அறிவிக்கப்பட்டன. 

இந்த தேர்தல்கள் ஏப்ரல் 4 ல் தொடங்கி மே 10 ம் தேதி முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில வாக்கு எண்ணிக்கையும் மே 13 ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடப்பதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டது. 

அதன்படி வரும் 25 ம் தேதிக்குள் பட்ஜெட் கூட்டத் தொடரை முடிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, இந்த குழுவின் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் கூட்டத் தொடரை சுருக்குவது என்று மத்திய அமைச்சரவை குழு முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை குழுவின் இந்த பரிந்துரை பாராளுமன்ற அலுவல் ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் ஒட்டுமொத்த நிதி தொடர்பான அலுவல்களும் வரும் 25 ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago