முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சியை கவிழவிட மாட்டேன்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஆக.24 - ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால், கவிழவிடமாட்டேன் என பிரஜா ராஜ்ய கட்சியின் தலைவர் சிரஞ்சீவி உறுதியுடன் கூறினார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்ரகிரசிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது வீடுகள், அலுவலகங்கள் சி.பி.ஐ. யால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் ஜெகனின் ஆதரவாளர்கள் 74 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆரின் பெயரையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இந்த சோதனை தனது மகனை அரசியலில் இருந்து வீழ்த்த முடியாதவர்கள் இப்படி பழிவாங்குகிறார்கள் என்று ஜெகனின்  தாயார் விஜயலெட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். 

சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகர ரெட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளதை கண்டித்து ஆந்திர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 154 பேராக குறைந்து விட்டனர். சட்டசபையில் பெரும்பான்மைக்கு 148 பேர் தேவை. தற்போது காங்கிரசுக்கு 6 பேர் தான் அதிகமாக உள்ளனர். இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜா ராஜ்ய கட்சியை நடத்தி வந்த நடிகர் சிரஞ்சீவி அவரது கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ஜெகனின் பின்னால் நின்று கிரணகுமார் அரசை கவிழ்க்கப்பார்க்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்