முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரக்ஷான் படத்துக்கு தடை விதித்தது செல்லாது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.- 21 - உத்தரபிரதேசத்தில் அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷான் படத்துக்கு தடை விதித்தது செல்லாது என்று நேற்று  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.  அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷாம்இந்திப் படம் கடந்த வாரம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது.  இந்தப்படத்தில் இட ஒதுக்கீடு கொள்ளை விமர்சிக்கப்பட்டு இருப்பதாக கூறி உத்தரபிரதேசம், பஞ்சாப், ஆந்திரா மாநில அரசுகள் திரையிட தடை விதித்தது. பின்னர் பஞ்சாப், ஆந்திராவில தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. உத்தரபிரதேசத்தில் மட்டும் தடை நீக்கப்படவில்லை.  இதை எதிர்த்து பட அதிபர் பிரகாஷ்ஜா சுப்ரீம் கோட்டில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் முகுந்தம் சர்மா, அனில்தவே ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் மனுவை விசாரித்து ஆரக்ஷான் படத்துக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்பு கூறினார்கள். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது; ஆராக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்த பின் மாநில அரசுக்கு தடைவிதிக்க அதிகாரம் இல்லை. இந்தப்படம் உத்தரபிரதேசம் தவிர நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. பிரச்சினை உருவாகக் கூடிய மாநிலங்களில் கூட எந்தத் தடையும் இல்லாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.உத்தரபிரதேச அரசு சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. சட்டம் -ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. உத்தரபிரதேச அரசு நியமித்த கமிட்டி சிபாரிசு செய்ததன் பேரில் தடை விதிக்கப்பட்டு இருப்பது சரியல்ல. படத்தில் சமூக பிரச்சினை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதுநம் நாட்டு ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் விவாதத்துக்கு விடப்பட வேண்டியது விஷயம். சென்சார் போர்டில் சிறந்த வல்லூனர்கள் இடம் பெற்று உள்ளனர். தலித் பிரிவைச் சேர்ந்தவர்களும், உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் எல்லாம் படத்தை பார்த்து ஆட்சேபம் தெரிவிக்காமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு மாநில அரசின் கமிட்டி காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஏற்கதக்கதல்ல. எனவே படத்துக்கு தடைவித்தது செல்லாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்