முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபியின் தலைக்கு ரூ.8 கோடி பரிசு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஆக.26 - கடுமையான போருக்குப்பின் திரிபோலி முழுவதுமாக புரட்சிப் படையினர் வசமானது. அதிபர் கடாபி தலைமறைவானார். அவரது தலைக்கு 8 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்நாட்டு அதிபர் மும்மத் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் புரட்சி செய்தனர். இதனால் புரட்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம்பேர் பலியானார்கள். புரட்சிப் படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டது. இதையடுத்து புரட்சிப் படையினர் படிப்படியாக வெற்றிகளைக் குவித்தனர். இறுதியாக தலைநகர் திரிபோலியும் பிடிபட்டது. ஆனால் அதிபர் கடாபி அங்கில்லை. இதையடுத்து கடாபியின் குடியிருப்பு பகுதியான பாப் அல் அஜீசியா மீது புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். 5 மணி நேர கடுமையான துப்பாக்கி சண்டைக்குப்பின் புரட்சிப் படை வெற்றிபெற்றது. கடாபியின் வீடு, அலுவலகம், ராணுவ அலுவலகங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அங்கும் கடாபி இல்லாததால் புரட்சிப் படையினர் பெரும் கொந்தளிப்படைந்தனர். இதனால் கடாபியின் ஆதரவாளர்கள் புரட்சிப் படையினரின் ஆவேசத் தாக்குதலுக்கு ஆளாயினர். கடாபி எங்கும் தப்பியோடவில்லை. அவர் திரிபோலியில்தான் எங்கோ பதுங்கு குழியில் ஒளிந்திருக்கிறார் என்றும் புரட்சிப் படையினர் தெரிவித்தனர்.  

இந்நிலையில் கடாபியின் கடாபியின் பேச்சு இணையதளத்தில் வெளியானது. அதில் எதிரிகளை முறியடிக்கவே தாங்கள் பின்வாங்கியுள்ளதாகவும், புரட்சிப் படைகளை அழித்தே தீருவோம் என்றும் தாங்கள் பின்வாங்கியது ஒரு போர்த் தந்திரம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து புரட்சிப் படையினர் கடாபியை பிடித்துக் கொடுத்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு ரூ. 8 கோடி பரிசாக வழங்கப்படும் என்று புரட்சிப் படையின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்