முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் உடல் நிலை குறித்து கவலை வேண்டாம் : ஹசாரே

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.26 - என் உடல்நிலை குறித்து கவலை வேண்டாம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை நான் சாக மாட்டேன். உயிருடன்தான் இருப்பேன் என்று அண்ணா ஹசாரே உருக்கமாக கூறினார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது எடையில் சுமார் 7 கிலோ குறைந்துவிட்டது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஹசாரே உடல் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவருடைய ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுக்காலையில் அண்ணா ஹசாரே தனதுடன் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் என் உயிரைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். நான் மேலும் 8 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பேன். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை நான் உயிருடன் இருப்பேன். இறந்துவிட மாட்டேன். என் உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். கவலைப்படும்படி எதுவும் இல்லை. கடவுள் கிருபை எனக்கு இருக்கிறது. உங்களிடம் இருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. எனக்கு எந்தவித சிரமமும் இல்லை. ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை நான் சாக மாட்டேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அண்ணா ஹசாரே கூறினார். இதற்கிடையில் நேற்றுக்காலையில் ஹசாரேயின் உடலை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில் ஹசாரேயின் உடல்நிலை குறித்து எங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது என்றனர். ஆனால் அவரது ரத்த அழுத்தமும் இருதய துடிப்பும் சீராக இருக்கிறது. ஹசாரா ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடலில் நீர் அளவு குறைந்துள்ளது. ஹசாரே எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது என்று டாக்டர்கள் குழு தலைவர் நரேஷ் ட்ரெஹன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago