முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை :இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூர், மார்ச். - 6  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பல ப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19 -ம் தேதி துவங் கியது. இந்தப் போட்டி அடுத்த மாதம் 2 -ம் தேதி முடிவடைகிறது. இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற 14 முன்னணி அணிகள் களத்தில் குதித்துள்ளன. மேற்படி 14 அணிகளும், ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

தற்போது லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த லீக் ஆட்டங்கள் வரும் 20 -ம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்பு காலிறுதி ஆட்டம் 23 -ம் தேதி துவங்கிறது. இதனைத் தொடர்ந்து அரை இறுதி மற்றும் இறு திச் சுற்று நடக்க இருக்கிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்தி யா அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. 

பின்பு கடந்த 27 -ம் தேதி இந்திய அணி பெங்களூரில் இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. ஆனால் இந்தப் போட்டி இறுதியில் எந்த ஒரு  அணிக்கு ம் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. 

இந்தியா தனது 3 - வது லீக்கில் பி பிரிவில் உள்ள அயர்லாந்து அணியைச் சந்திக்க இருக்கிறது. இந்தப் போட்டி பெங்களூரில் உள்ள சின் னசாமி அரங்கத்தில் இன்று பிற்கபல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இது உலகக் கோப்பையில் 21 - வது போட்டியாகும். 

கடந்த 2 -ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அயர்லாந்து அணி ரன் சேசில் இங்கிலாந்து அணியை அதிர்ச்சி தோல்விக்கு உள்ளாக்கியது. 

எனவே அயர்லாந்து அணியை கத்துக் குட்டி அணி என்று சாதாரண மாக எடை போட்டு விட முடியாது. அந்த அணிக்கு எதிராக கவனமாக ஆடினால் தான் வெற்றி பெற முடியும். 

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. சேவாக், காம்பீர், டெண்டுல்கர், விராட் கோக்லி, யுவராஜ் சிங் கேப்டன் தோனி மற்றும் யூசுப் பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

அதே போல ஜாஹிர்கான் தலைமையிலான வேகப் பந்து வீச்சு கூட்டணியும் நல்ல நிலையில் உள்ளது. அவருக்கு பக்கபலமாக முனாப் படேல், ஸ்ரீசாந்த், மற்றும் ஆஷிஸ் நெக்ரா ஆகியோர் உள்ளனர். சுழற பந்து வீச்சிற்கு ஹர்பஜன் சிங் மற்றும் சாவ்லா ஆகியோர் உள்ளனர்.  

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற இருக்கும் லீக் ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் ரசிகர்கள் போட்டி

யை நேரடியாக காணலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago