முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

74 வயதான ஹசாரே சமாளிப்பது எப்படி?

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.27 - அன்னா ஹசாரே தொடர்ந்து 11 நாட்களாக தண்ணீர் தவிர வேறு எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து வருவது ஆச்சரியத்தை தருவதாக டாக்டர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர். பொதுவாக ஒருவர் உணவை சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் கலோரி சத்துக்கள் பயந்படுத்தப்படும். இதில் மூளைக்கு செல்லக்கூடிய குளுகோஸ் சத்தும் அடங்கும். உண்ணாவிரதம் தொடங்கி 5 நாள் கழித்து உடலில் உள்ள கொழுப்பில் இருந்து கீட்டோன் கிரகிக்கப்படும். அப்போது உண்ணாவிரதம் இருக்கக்கூடிய நபர் களைப்படைவார். ஆனால் 74 வயதுடைய அன்னா ஹசாரே பெரிய அளவில் சோர்வடையாமல் எப்படி இருக்க முடிகிறது என்று மருத்துவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் மருத்துவ குழு பரிசோதித்து கொண்டிருக்கும் போது அன்னாஹசாரே உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பும் இல்லை என்று மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony