முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ. ஆ. - இங்கிலாந்து அணிகள் சேப்பாக்கத்தில் இன்று பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 6 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தப் போட்டி பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 லீக் ஆட்டங்கள் சென் னையில் நடத்தப்படுகிறது. நியூசிலாந்து - கென்யா, தென் ஆப்பிரிக் கா - இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ் - இங்கிலாந்து, இந்தியா - வெஸ் ட் இன்டீஸ்  ஆகிய ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டது. 

கடந்த 20 -ம் தேதி நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் 2 -வது ஆட்டம் இன்று நடக்கிறது. காலை 9.30 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீசை தோற்கடித்தது. 2 -வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 231 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில், நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடன் மோதிய 2 -வது ஆட்டம் டை ஆனது. 3 -வது ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோ ற்றது. 

தென் ஆப்பிரிக்கா 3 -வது வெற்றியப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டிவில்லியர்ஸ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 2 ஆட்டத்திலும் சதம் அடித்து இருக்கிறார். 

இது தவிர, ஹசிம் அம்லா , கேப்டன் ஸ்மித் காலிஸ் டுமினி போன்ற உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். பந்து வீச்சில் புதுமுக வீரர் இம்ரான் தாகிர் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 

பாகிஸ்தானில் பிறந்த அவர் 2 ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். ஸ்டெயின், மார்கெல், மார்னே, டிசோட்சோபே ,போத்தா போன்ற சிற ந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர். 

அயர்லாந்திடம் தோற்ற அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணி இன் னும் மீளவில்லை. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை இன்றைய போட்டியில் வெல்வதே அந்த அணிக்கு ஆறுதலாக இருக்கும். 

கேப்டன் ஸ்ட்ராஸ், பெல், டிராட், பீட்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும், பிராட், பிரெஸ்னன், சுவான் போன்ற சிறந்த பெளலர்க ளும் அந்த அணியில் உள்ளனர். 

தரவரிசையில் 4 -வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவை தோற்கடிக்க இங்கிலாந்து கடுமையாக போராடும். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இருக்கும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்