முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரதத்தை நிறுத்த ஹசாரே விதிக்கும் 3 நிபந்தனை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.27 - என்னுடைய 3 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் உண்ணாவிரத்தை நிறுத்த அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.  ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கடந்த 11 நாட்களாக டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்படலாம் என்று கருதி உண்ணாவிரதத்தை கைவிடும்படி அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் கேட்டுக்கொண்டார். 

இந்தநிலையில் உண்ணாவிரதத்தை கைவிட 3 நிபந்தனைகளை ஹசாரே விதித்துள்ளார். லோக்பால் மசோதா வரம்புக்குள் உயரதிகாரிகளை கொண்டுவர வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் உரிமைகள் குறித்த பதிவேடுகளை வைக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அண்ணா ஹசாரே நிபந்தனை விதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்