முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் சிக்கன்குன்யாவுக்கு 7 பேர் பலி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஜல்னா,ஆக.27 - சிக்கன்குன்யா நோய் மீண்டும் பரவுகிறது. இந்த நோய்க்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. சிக்கன்குன்யா நோய் மிகவும் கொடூரமானது. விஷவாயு தாக்கினால் முதலில் உடல் உறுப்புக்களை பாதித்து அடுத்து உயிரை எடுத்துவிடும். அதேமாதிரிதான் சிக்கன்குன்யா நோயும். இந்த நோய்க்கு உடனடியாக வைத்தியம் பார்க்காவிட்டால் முதலில் உடல் உறுப்புக்களை பாதிக்கச் செய்யும் அடுத்து உயிரையே குடித்துவிடும். இந்த கொடிய நோய் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாகவும் இதற்கு 7 பேர் பலியாகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் இருந்து சிக்கன்குன்யா நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் ஆரம்ப சுகாதார மையங்கள்,மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிக்கன்குன்யா நோய்க்கு ஜல்னா மாவட்டம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கன்குன்யா நோய்க்கு 12 வயது சிறுமி, 4 வயது குழந்தை இறந்துவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கன் குன்யா நோயால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி டி.டி.பகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்