முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடியை விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மும்பை, மார்ச். - 6 -  இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு முறை கமிட்டி, ஐ.பி.எல். முன் னாள் தலைவர் லலித் மோடியை விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனு மதி அளித்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பில் நிதி முறைகேடு தொடர்பாக, விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு முறை கமிட்டிக்கு வாரி யம் ஆணையிட்டது. 

இதற்கு தடை விதிக்க கோரி லலித் மோடி மும்பை நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார். மோடியின் கோரிக்கையின் அடிப்படை தகவ ல்கள் பலமாக  இல்லை என்று கூறிய நீதிபதி எஸ். ஜே. கதவாலா, லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு முறை கமிட்டியிடம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அவர் மீதான விசாரணையில் தேக்கம் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்கு முறை கமிட்டிக்கு விசாரிக்க அனு மதி அளிக்காவிட்டால் விசாரணையே அர்த்தமற்றதாகி விடும் என்று நீதிபதி எஸ்.ஜே. கதவாலா கூறினார். 

இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாதம் நியாயமாக உள்ளது. அதனால் லலித் மோடியை விசாரிக்கும் அதிகாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் உள்ளது என்று தனது தீர்ப்பில் கதவாலா கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து லலித் மோடியின் பாஸ்போர்ட் நேற்று முன் தினம் காலை உடனடியாக முடக்க உத்ததரவிடப்பட்டது. ஆனால் லலித் மோடி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். 

லலித் மோடி கூறும் போது, பாதுகாப்பு, அச்சுறுத்தல் குறித்த தகவலி ல் ஆதாரமில்லை என்று ஐ.பி.எல். நிதி மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்கப் பிரிவும் தெரிவித்துள்ளது. லலித் மோடி மீது ஊழல் வழ க்கு மட்டுமின்றி அன்னிய செலவாணி மோசடி வழக்கும் விசாரணை யில் உள்ளது. 

பி.சி.சி.ஐ.யின் துணை அமைப்பான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி கள் கடந்த 3 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நடந்தது. அடுத்தமாதம் கடைசியில் இதன் 4 -வது ஆண்டு போட்டி துவங்க இருக்கிறது. 

ஐ.பி.எல். போட்டியில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் லலித் மோடி மீது புகார் எழுந்தது. அவர் தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்த புகாரை விசாரிக்க ஐ.பி.எல். நிர்வாகம் ஒரு குழுவை நியமித்த து. இதில் ஆஜராகுமாறு லலித் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே நேரம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அவர் தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

ஆனால் முன்னாள் தலைவரான லலித் மோடி ஐ.பி.எல். நியமித்த விசாரணைக் குழு முன்பாக ஆஜராகவில்லை. இதற்கிடையே அவர் திடீரென்று வெளிநாடு சென்று விட்டார். இதனால் இந்த வழக்கில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்