முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே உடல் நலத்துடன் இருக்கிறார் - டாக்டர்கள்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.27 - அண்ணா ஹசாரே நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி காந்தீயவாதி அண்ணா ஹசாரே நேற்று 11-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ஹசாரேயின் உடல் எடையில் 7 கிலோ குறைந்துவிட்டது. அவரது எடையில் 7 கிலோ குறைந்திருந்தாலும் அவர் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று ஹசாரேயின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் குழு தலைவர் டாக்டர் ரவி ஆர். கேஸ்லிவால் தெரிவித்துள்ளார். ஹசாரேயின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு சரியாக இருக்கிறது. ஹசாரே உடல் நலத்துடன் இருக்கிறார் என்று கேஸ்ளிவால் மேலும் கூறியுள்ளார். இருந்தபோதிலும் ஹசாரேயின் உடல்நிலையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony