முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பாலை விவாதத்திற்கு எடுக்கக்கோரி நோட்டீஸ்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.27  - பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி சபாநாயகர் மீரா குமாருக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஊழலை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு சார்பாக தயாரித்த லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா ஹசாரே குழுவினர் தயாரித்த ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனையொட்டி வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி அண்ணா ஹசாரி கடந்த 11-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் பயந்துபோன மத்திய அரசு ஹசாரே தயாரித்த ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சம்மதித்தது. ஆனால் இதுகுறித்து நோட்டீஸ் யாரும் கொடுக்காததால் ஜன்லோக்பால் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதில் சந்தேகம் நிலவியது. இதை போக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேர் ஓட்டெடுப்பு இல்லாத விதிமுறைகளின் கீழ் ஜன் லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேர் சபாநாயகர் மீராகுமாருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஜகதாம்பிகா பால், அனு தாண்டன்,சஞ்சய் நிரூபம் ஆகியோர் விதி 193-ன் கீழ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஓட்டெடுப்பு இல்லாமல் இந்த மசோதாவை விவாதத்திற்கு இந்த விதியின் கீழ் எடுத்துக்கொள்ளலாம். மசோதா மீது இன்று விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago