முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஆக.27 - ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆந்திராவில் இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாராயணா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் எம்.பி.க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து 25 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழக்க நேரிடலாம். இதுகுறித்து நேற்று ஐதராபாத்தில் சத்யநாராயணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெகன் மோகனுக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. மாநிலத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தடுக்க முடியுமா? மாநிலத்தில் தேர்தல் வந்தால் அதை சந்திக்க நாங்கள் தயாராக வேண்டும். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடுகளை நாங்கள் கண்டாக வேண்டும். கட்சியின் நலனுக்காக நாங்கள் உழைக்க வேண்டும் என்று சத்யநாராயணா கூறினார். ராஜினாமாவை திரும்பப்பெறக்கோரி அந்த 25 பேர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் இருக்க விருப்பம் இல்லாதவர்களை நாங்கள் எதுவும் கேட்டுக்கொள்ளத்தேவையில்லை. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய பணம் கொடுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்றும் சத்யநாராயணா குற்றஞ்சாட்டினார். ராஜசேகர ரெட்டி மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சி செய்கிறார் என்றும் சத்யநாராயணா மேலும் குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago