முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாந்தன்- பேரறிவாளன் - முருகனுக்கு செப்., 9-ம் தேதி தூக்கு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 27 - ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவா ளன், முருகன் ஆகிய 3 பேருக்கும் அடுத்த மாதம் 9 -ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. இதற்கான அரசு உத்தரவு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவா ளன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந் த தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. 

மரண தண்டனையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு சாந்த ன், பேரறிவாளன், முருகன் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். 11 வருடங்கள் இந்த கருணை மனு ஜனாதிபதியின் பரிசீ லனையில் இருந்து வந்தது. 

இறுதியாக மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற் கான தகவல் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான கடிதம் உள்துறை செயலாளர் ரமேஷ் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ராஜீவ் கொலையாளி  களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த கடிதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு நேரில் வழங்கப்படு ம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடிதம் வந்த ஒரு வார காலத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படும் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி எதி ர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள  னர். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும், விடுதலை செய்வதற் கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமை அமை ப்பினரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சென்னை உயர்நீதிமன்ற த்தின் உதவியை நாட உள்ளனர். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தற்போது டெல்லியில் உள்ளார். அவரும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அர சிடம் இருந்து வந்த கடிதத்தை அடுத்து அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் வேலூர் சிறையில் செய்யப்பட்டு வருகின்றன. 

கமாண்டோ படையும், வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்படுவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூக்கு தண்டனை எப் போது விதிக்கப்படும் என்று சிறை அதிகாரியிடம் கேட்ட போது, அறிவிப்பு வந்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்பது விதி. அதன்படி தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். கடைசியாக கிடைத்த தகவலின்படி அடுத்த மா தம் 9 - ம் தேதி இந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்