முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேயின் நிபந்தனைகளுக்கு பா. ஜ முழு ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.28 - உண்ணாவிரதத்தை கைவிட அண்ணா ஹசாரே விதித்துள்ள 3 நிபந்தனைகளுக்கு பாரதிய ஜனதா முழு ஆதரவு அளித்துள்ளது. ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேயின் உடல் எடையில் சுமார் 7 கிலோ குறைந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்படலாம். அதனால் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று அவரை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த ஹசாரே, உயரதிகாரிகளை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவர வேண்டும். அரசு அலுவலகங்களில் மக்கள் உரிமைகள் குறித்த பட்டியலை வைக்க வேண்டும். மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகளுக்கு பாரதிய ஜனதா முழு ஆதரவு கொடுத்துள்ளது. அதேசமயத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து சில விஷயங்களில் லோக்பால் மசோதாவில் இருந்து பிரதமருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது. இதை ராஜ்யசபையில் ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்தார். அதேசமயத்தில் இந்த அமைப்புக்கோ அல்லோது புலனாய் ஏஜன்சிக்கோ நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை தவிர மற்ற விஷயங்களில் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் அதிகாரத்தை வழங்கக்கூடாது என்றும் அருண்ஜெட்லி கூறினார். பாரதிய ஜனதாவின் இந்த கருத்து குறித்து அண்ணா ஹசாரேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மக்கள் கேட்டு பெறும் தகவல் உரிமை மற்றும் இதர உரிமைகள் குறித்த அட்டவணையை வைக்கக்கோரும் ஹசாரேயின் யோசனை மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் இது தொடர்பாக சில மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்