முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்லீலா மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.28 - ராம்லீலா மைதானத்தில் கூலிப்படைகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்றுமுன்தினம் சில கூலிப்படைகள் தேசிய கொடியை கையில் ஏந்திக்கொண்டு மைதானத்தின் பிரதான வாசல் வழியாக நுழைய முயன்றனர். அதற்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மத்திய படையினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுடன் கூலிப்படையினர் மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனையொட்டி ராம்லீலா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோதல் நடந்த மைதானத்தில் முக்கியப்பிரமுகர்கள் செல்லும் வாயிலில் கூடுதல் போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடியோ போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கூலிப்படையினர் நிற்கும் இடத்தில் ஹசாரே ஆதரவு இளைஞர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராம்லீலா மைதானத்திற்கு வரும் வழியில் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் விளக்குகள் போடப்பட்டுள்ளன. மைதானத்தின் அனைத்து வாயில்களிலும் விஷமிகள் யாராவது நுழையாமல் இருக்க இளைஞர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். யாராவது குடித்துவிட்டு வந்தாலும் அவர்களும் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மைதானத்தின் முக்கிய இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மைதானத்திற்கு அருகே யாராவது ரவுடிகள் தென்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாலையில் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony