முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவின் 3 கோரிக்கைகளை பார்லி. பரிசீலிக்கும்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.28 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹசாரே எழுப்பியுள்ள 3 கோரிக்கைகளை பாராளுமன்றம்தான் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்றும் இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்போரையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று 12-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த  நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் அன்னா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை பாராளுமன்றம்தான் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

நாம் எதை செய்தாலும் அது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு உட்பட்டு  இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்தின் முடிவில் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டால், அது குறித்து பாராளுமன்ற நிலைக்குழு தனது  நடைமுறை வழக்கம்,  அமுல்படுத்தும் முறை,  அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் ஆகியவற்றை பின்பற்றி இறுதி முடிவு செய்யும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு பாராளுமன்றத்தின் மேன்மைக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இந்த லோக்பால் மசோதா குறித்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஹசாரேயின் கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் இது குறித்து பாராளுமன்றம்தான் கூர்ந்து கவனித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

இந்த நிலையில் லோக்பால் மசோதா குறித்தும் ஹசாரேவின் உண்ணாவிரதம் குறித்தும் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டாவது முறையாக மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் ஹசாரே குழுவினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் கூட அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அதிகார வட்டாரங்கள் கூறின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago