முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மட்டத்தில் இருப்பவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 28 - சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள்தான் விதிகளை எல்லாம் வளைத்து அவற்றை மீறி ஊழல் செய்வதில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது என்னவவோ பாமர மக்கள்தான் என்று ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி வேதனையோடு தெரிவித்தார். ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. அவரது இந்த போராட்டம் நேற்று 12 வது நாளாக நீடித்தது. தனது 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் உண்ணாவிரதத்தை கைவிடப் போவதாக ஹசாரே தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் லோக்சபையில் இன்று ஜன்லோக்பால் தொடர்பாக விவாதம் நடக்கும் என்று தெரிகிறது. நேற்று லோக்பால் மசோதா குறித்து ராஜ்யசபையில் விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லியும் பேசினார். அப்போது பேசிய அவர், அன்னா ஹசாரேவுக்கு தற்போது கிடைத்துள்ள மகத்தான ஆதரவு தற்போதுள்ள சூழலில் மக்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதையே தெளிவாகக்  காட்டுகிறது என்று குறிப்பிட்டார். தற்போதுள்ள நிலைமையை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதையும் ஹசாரேவின் உண்ணாவிரதம் எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார். ஊழல் என்பது பல துறைகளில் வியாபித்துக் கிடக்கிறது. அது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது என்றும் பேசிய அருண் ஜேட்லி, சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள்தான் விதிகளை வளைத்து ஊழல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வேதனையோடு குறிப்பிட்டார். சராசரி மனிதன்தான் ஊழலை எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. காரணம் அது வாழ்க்கை முறையாக மாறிவிட்டதுதான் என்றும் ஜேட்லி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்