முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கடைசி மூச்சு வரை போராட்டம் : அண்ணா ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.28 - வலுவான ஊழல் ஒழிப்பு சட்டத்திற்காக எனது இறுதி மூச்சு வரை போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனையொட்டி ஹசாரே குழுவினர் தயாரித்த ஜன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான சட்டத்தை கொண்டுவரும் வரை எனது போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹசாரே திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த 36 மணி நேரமாக எதுவும் பேசாமல் அமைதி காத்த ஹசாரே, நேற்று தனதுடன் உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஊழலை ஒழிக்க ஒரு வலுவான சட்டம் இயற்றப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என்று உறுதியாக கூறினார். கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் 74 வயது ஹசாரேயின் ஆரோக்கியம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். என்னால் இன்னும் 4 நாட்கள் வரை என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எதுவும் ஏற்பட்டுவிடாது என்று தனது ஆதரவாளர்களை ஹசாரே தெம்புபடுத்தினார். ஹசாரே இதை சொன்னதும் அங்கு கூடியிருந்தவர்கள் பலமாக கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்று கோஷம் போட்டனர். என்னுடைய சொந்த நலனுக்காக நான் உண்ணாவிரதம் இருக்கவில்லை. எனது சொந்த நலனுக்காக நான் உண்ணாவிரதம் இருந்திருந்தால் உண்ணாவிரதத்தை 5 நாட்களிலேயே முடித்துக்கொண்டியிருப்பேன். ஜன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறும் வரை என்னுடைய எதிர்ப்பு தொடரும். எனக்கு ஆதரவு அளிக்கும் உங்களிடத்தில் இருந்து சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியானது மேலும் 4 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க எனக்கு உதவும். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை நான் இறந்துவிட மாட்டேன் என்றும் ஹசாரே மேலும் கூறினார். தனது ஆதரவாளர்களிடையே ஹசாரே சுமார் 5 நிமிட நேரம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்