முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வரும் 7-ம் தேதி மிகப்பெரிய போராட்டம்-பிரகாஷ் காரத் தகவல்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

திருவண்ணாமலை,ஆக.- 29 - இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையை அரசியல் தீர்வை இலங்கை கொடுக்க வலியுறுத்தி  டெல்லியில் செப் 7 -ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியிருப்பதாவது; நாடு முழுவதும்  முக்கிய பிரச்சினையால் இன்றைய தினம் ஊழலுக்கு எதிராக மக்கள் திரண்டுள்ளனர். 13 நாள்களாக உண்ணாவிரதம் இருக்கும் அன்னாஹசாரேவின் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.  ஊழலை எதிர்த்து இடதுசாரிகள், போராட்டம் நடத்தி வருகிறது. இன்றைய தினம் கொண்டு வந்த அந்த சட்டத்தில் பிரதமர் சேர்க்கவேண்டும். ஊழல் அதிகாரிகள், பெரிய முதலாளிகள், துணைக்கொண்டு கடந்த 1894 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நில எடுப்பு சட்டம் மூலம் விவசாய நிலங்களை அரசு எடுத்து வருகிறது. இந்த சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு பாதகம் இல்லாத நிலையை உருவாக்க அரசு முன் வரவேண்டும்.  கடந்த 1991 -ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக ஊழல் பெரிதாகிவிட்டது. இதனால் மக்களுக்கு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.  2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகும், தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், அதனை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. ஈழத்தமிழர் மக்கள்- அரசியல் தீர்வை இலங்கை அரசு கொடுக்க வலியுறுத்தி டெல்லியில் செப் 7 -ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்