முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர் ஆக - 29 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் காலை 6.10 மணிக்கு பிள்ளையார் தேர் இழுக்கப்பட்டு நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து காலை 6.40 மணிக்கு நிலையம் வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து காலை 6,50 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் வலம் வந்து 7.40 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து வள்ளியம்மன் தேர் காலை 7.50 மணிக்கு வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் வந்து 8.30 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுத்தார்கள். தேரோட்டத்திற்கான் ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் உதவி ஆணையர் செல்லதுரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, அதிமுக நகர செயலாளர் மகேந்திரன், தொழில் அதிபர்கள் ரமணி, ஆனந்த், நாராயணன், உட்பட பலர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சாமிதுரை வேலு, திருச்செந்தூர் டிஎஸ்பி. ஞானம் சேகரன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, பிரதாபன், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சாலைபஜவன்னா மற்றும் போலீஸார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்தேரோட்டம் நேற்று நடந்தபோது எடுத்தபடம்.

    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்