முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மக்களை கண்ணீர் வடிக்க செய்யும் தங்கம் விலைஉயர்வு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஆக.- 30 - தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிக லாபமாகி வந்தாலும் தங்கம் விலை உயர்வானது. கேரள மக்கள் கண்களில் கண்ணீர் மல்க செய்துள்ளது. உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஒரு பவுன் தங்கத்திற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் விலை ரூ.21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது இந்திய மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்தாலும் கேரள மக்களுக்குத்தான் அதிக கஷ்டத்தை கொடுத்துள்ளது. அங்கு மணமகளுக்கு பரிசாக தங்கம் கொடுக்கும் பழக்கும் இருப்பதால்தான் இந்த கஷ்டத்திற்கு காரணம். அங்கு ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது அந்த மணமகளுடைய உறவினர்கள் கட்டாயம் தங்கம் கொடுக்க வேண்டுமாம். அதேசமயத்தில் தங்கத்தின்விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் சில்லறை விற்பனை குறையவில்லையாம். இதற்கு காரணம் தங்கமானது திருமணத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டதால்தான். கேரளாவில் ஒரு வருடத்திற்கு 60 முதல் 70 டன் தங்கம் வரை விற்பனையாகுவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வருமானம் கிடைக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்களுடைய எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அதேசமயத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே போனால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்