முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஜனாதிபதி புறப்பாடு தாமதம்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

கொல்லம், செப்.- 1 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டி இருந்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டரில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வது 40 நிமிடம் தாமதமானது. கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்து சேர்ந்தார். பிறகு கொல்லம் அஷ்டாமுடி ஏரியில் நடைபெற்ற ஜனாதிபதி கோப்பைக்கான படகுப் போட்டியை துவக்கிவைத்தார். அதன்பிறகு கொல்லத்திலேயே இரவைக் கழித்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், நேற்று காலை திருவனந்தபுரத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அந்த இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. ஹெலிகாப்டரில் உள்ள ஏர்கண்டிஷனர்களில் ஒன்றில் புகை கிளம்பியதை ஹெலிகாப்டர் விமானி கவனித்தார். இதனால் அந்த ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான் இந்த கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். என்றாலும் சுமார் 40 நிமிட தாமதத்திற்கு பிறகே வேறு ஒரு ஹெலிகாப்டரில் ஜனாதிபதி திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். பழுதான ஹெலிகாப்டரை தொழில்நுட்ப பொறியாளர்கள் பழுது பார்த்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!