முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையீடு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 2 - இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் சிங்கள ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தனர். ஏராளமான தமிழ் பெண்களை கற்பழித்தனர். இளைஞர்களை ஊனப்படுத்தினர். இலங்கையில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்கள ராணுவ முகாம்கள் இன்னும் இருக்கின்றன. இங்கு தங்கியிருக்கும் சிங்க ராணுவ வீரர்கள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதனால் அந்த ராணுவ முகாம்களை அகற்ற இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வற்புறுத்து கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில்  இந்திய எம்.பி.க்களின் உதவி மற்றும் ஆதரவுடன் இந்த முறையீடு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வைக்கப்பட்டுள்ளது என்று இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள எம்.பி. சுரேஷ்ஸ் பிரேசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் பகுதியில் உயர்பாதுகாப்பு வளையங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது என்று பிரேமசந்திரன் கூறினார். ஆனால் அந்த மனுவிற்கு இன்னும் பிரதமரிடம் இருந்து பதில் வரவில்லை என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்